2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு சீல்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கட்டடத்தில் இயங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகக் கட்டடத்தில், ஒருங்கிணைப்பு அலுவலகம் இயங்கி வந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, இதன் செயற்பாடுகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இருந்தபோதும், வௌ்ளிக்கிழமை (13), குறித்த அலுவலகம் இயங்குவதை அவமானித்த சிலர், மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

இதையடுத்தே, இந்த அலுவலகத்துக்கு சீல்​ வைத்து மூடப்பட்டது.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், குறித்த அலுவலகத்தை தேர்தல் முடியும் வரையில் இயக்க வேண்டாமமென ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையிலும் இயங்கியதால், வௌ்ளிக்கிழமை (13), குறித்த அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X