2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய இளைஞர்கள் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குப்பிளான், தயிலங்கடவைப் பகுதியில் கசிப்புக் காய்ச்சிய இரண்டு இளைஞர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பிளான் பகுதியினைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் மற்றும் ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 80 லீற்றர் கோடா, இரண்டு பெரல்கள், சட்டி பானைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி இரண்டு இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அவர்களை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று, அவர்களால் செயற்படுத்தப்பட்ட கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகை செய்து, இரண்டு பேரையும் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .