2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கூட்டுறவாளர் தின நிகழ்வுகள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சர்வதேசக் கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செப்டெம்பர் 4ஆம் திகதி காலை 10 மணிக்கு சபைத் தலைவர்  தலைமையில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது, சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு சபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசில்களும் கேடயங்களும் வழங்கப்படும்.

அத்துடன், சிறந்த கூட்டுறவாளர்கள், சிறந்த சங்கங்கள் போன்றவையும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .