2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

’குறைபாடுகளைத் தீர்க்க மாநகர சபை நடவடிக்கை எடுக்கவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் நகர் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் தொடர்பில், யாழ்ப்பாண மாநகர சபை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லையென, யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்தின் தலைவர் ஞானகுமார் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2018ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள நவீன சந்தை கட்டட தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் தொடர்பில் தீர்வுப் பெற்றுக்கொடுக்கப்படவில்லையெனவும் கூறினார்.

பல்வேறு தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், தமக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண யாழ்ப்பாணம் மாநகரசபை முன்வரவில்லையெனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .