2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கல்வியங்காடு பொதுச்சந்தை முடங்கியது

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வழங்கிய வாக்குறுதிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை நிறைவேற்றவில்லையெனத் தெரிவித்து, கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகளால் இன்றைய தினம் (07) கடையடைப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனால், கல்வியங்காடு பொதுச்சந்தை முற்றாக முடங்கியது.

கல்வியங்காடு பொதுச் சந்தையின் பருத்தித்துறை வீதிக்கான வாயிலைப் பெரிதாக்குவது, கழிவகற்றலைச் சீராக முன்னெடுப்பது, வரி அறவீட்டைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நிறைவேற்றவில்லையெத் தெரிவித்தே,  கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள், இந்தக் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--