2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

கல்வியங்காடு மீன் சந்தையை விஸ்தரிக்கவும்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கல்வியங்காடு மீன் சந்தையை விஸ்தரிக்குமாறு, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அண்மையில், யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆளுகையின் கீழிருந்த கல்வியங்காடு பொதுச்சந்தை புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை போதிய வசதிகளின்றி காணப்படுவதால், மீன்களை வாங்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மீன் சந்தையை விஸ்தரித்து, உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வார இறுதி நாள்களில், சுமார் 2,500க்கும் அதிகமான பொதுமக்கள் குறித்த  மீன் சந்தையைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--