2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 30 சதவீதம் வாக்குப்பதிவு

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என் நிபோஜன்

கிளிநொச்சியில் இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 30 சதவீதம் வாக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் அமைதியான முறையில் தமது வாக்குகளைத் தொடர்ந்தும் பதிவு செய்து வருவதாகவும் இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் 100 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .