Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
காக்கைதீவு மீன்பிடி இறங்குதுறையில் அமைந்துள்ள சந்தையை குத்தகைக்கு விடுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்படுவதால், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சந்தையை குத்தகைக்கு விடுவதற்கான கேள்வி அறிவித்தல் பிரதேச சபையால் விடப்பட்டு, சாவல்கட்டைச் சேர்ந்த இரண்டு பொது அமைப்புக்கள் முன்வந்தன. இந்நிலையில், கேள்வி கோரலின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குத்தகைக்கு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக சந்தை குத்தகைக்கு விடப்படாமல் உள்ளது.
கூடிய விலை கோரிய சாவல்கட்டு கிராமிய கடற்றொழில் அமைப்புக்கு சந்தையைக் குத்தகைக்கு வழங்க பிரதேச சபை முன்வந்து, இது தொடர்பில் குறித்த அமைப்புக்கு, சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டு, சந்தையை பொறுப்பேற்குமாறு கடிதம் மூலம் பிரதேச சபைச் செயலாளர் அறிவித்திருந்தார்.
எனினும், இதனை ஏற்காத அவ்வமைப்பின் தலைவர், 'பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்கினால் மாத்திரமே சந்தையை குத்தகைக்கு எடுக்க முடியும். அத்துடன், இடையூறாக இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச சபை உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே தாங்கள் சந்தையை குத்தகைக்கு எடுப்போம்' எனக் கூறியுள்ளார்.
இதனால், சந்தையைக் குத்தகைக்கு விடும் விடயம் தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago