2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கிராமத்துக்கு மின்குமிழ்கள் பொருத்தப்படுகின்றன

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட கிராமங்களின் வீதிகளுக்கு தலா 5 மின்குமிழ்கள் வீதம் பொருத்தும் நடவடிக்கையை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

காக்கைதீவிலிருந்து மாதகல் வரையான 28 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை உள்ளது. இந்தக் கிராமங்களின் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதி என்பவற்றுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்படாமையால் வீதிகள் இரவில் இருளில் மூழ்கியிருந்தன.

வீதிகளில் மின்விளக்குள் இல்லாமையால் வழிப்பறிகள், திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக பொது அமைப்புக்கள் பிரதேச சபைக்குச் சுட்டிக்காட்டின.

இதனடிப்படையில், முதற்கட்டமாக கிராமத்துக்கு 5 மின்குமிழ்கள் வீதம் பொருத்தப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X