2021 ஜனவரி 27, புதன்கிழமை

4 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கஞ்சா போதைப்பொருளை எடுத்துச்சென்ற குடும்பஸ்தர் ஒருவரை, 4 கிலோவும் 250 கிராமும் நிறையுடைய கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று, இன்று புதன்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்டான்லி லோஸின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் குழு, மேற்படி சந்தேகநபரை, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கைது செய்தது.

மேற்படி குழுவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், செம்மணி பகுதிக்குச் சென்ற பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த மோட்டார் சைக்கிளை மறித்துச் சோதனையிட்டு, கஞ்சா போதைப்பொருள் கடத்தலை முறியடித்தனர்.

கைது செய்யப்பட்டவர், கச்சாய் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்றும் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .