2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி, முல்லைத்தீவு காணிகள் விடுவிக்கப்பட்டன

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில், இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 476 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவில் 137 ஏக்கர் காணிகளும் திங்கட்கிழமை (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்டது.

உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தை, கிளிநொச்சி  இரணைமடுக்குளத்துக்கு அருகில் ஆரம்பித்து வைத்த பின்னர், இந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்துக்குரிய காணிகளை, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகமூடாகவும் முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய காணிகளை மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனூடாகவும், காணி உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X