Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணையை சீல் வைக்குமாறும் அதன் உரிமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வெள்ளிக்கிழமை (02) உத்தரவிட்டார்.
மேற்படி கோழிப்பண்ணை சுகாதாரச் சீர்கேடான முறையில், துர்நாற்றத்துடன் இயங்கி வருவதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை சீர் செய்யுமாறு தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால், கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி அறிவுறுத்தப்பட்டது.
எனினும், அந்த அறிவுறுத்தலை செவிமடுக்காத உரிமையாளர், அதேநிலையில் தொடர்ந்தும் பண்ணையை நடத்தி வந்தமையால், கோழிப்பண்ணைக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தெல்லிப்பழை பொலிஸாரின் உதவியுடன் மேற்படி கோழிப் பண்ணைக்கு சீல் வைக்குமாறு சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு உத்தரவிட்ட நீதவான், அதன் உரிமையாளரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு தெல்லிப்பழை பொலிஸாருக்கும் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago