2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சைக்கிளைத் தூக்கி நிறுத்தியவரின் சங்கிலி போனது

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வீதியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவர், தனது ஐந்து பவுண் சங்கிலியைப் பறிக்கொடுத்தச் சம்பவமொன்று,  மருதடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில், நேற்று  (19) மாலை இடம்பெற்றுள்ளது.

நுணாவில் மேற்கு, மருதடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் துரைரத்தினம் (வயது 48) என்பவர், தனது JCB வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வீதி அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 

இதையடுத்து, குறித்த நபர் வாகனத்தில் இருந்து இறங்கி, விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளைத் தூக்கி நிறுத்தி விட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார். 

சிறிது நேரத்தில், அவரது வீட்டுக்கு 10 பேரை அழைத்துக் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் “எதற்காக, எனது மோட்டார் சைக்கிளை இடித்து விழுத்தி விட்டு வந்தாய்” எனக் கேட்டு, அவரைத் தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளைத் திருத்துவதற்கென, அவரது ஐந்து பவுண் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .