2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத வேலைத்திட்டங்கள்; ’சி.வி.கே காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன’

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளராக சி.வி.கே சிவஞானம் இருந்த காலத்தில் தான், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றனவென, மாநகர சபை உறுப்பினர் முடியப்பு  றெமீடியஸ்  குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று (03) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சிவஞானத்தின் காலப் பகுதியில்தான், யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறுபட்ட சட்டவிரோத வேலைத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவற்றை இன்று வரை நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .