2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சட்டத்தை மீறிய பொலிஸார்

Niroshini   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

யாழ்.- கோண்டாவில் டிப்போ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் பஸ் சாரதி, நடத்துனர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தை விசாரணை செய்ய வந்த போக்குவரத்து பொலிஸார் வீதி சமிஞ்கையை மீறும் வகையில் நடு வீதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை தரித்திருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.

இன்று சனிக்கிழமை (10) காலை புன்னாலைக்கட்டுவனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் கோண்டாவில் டிப்போ வாசலில் மறித்து அதில் நின்ற பயணிகளை ஏற்றியுள்ளனர்.

இதனால் கோண்டாவில் டிப்போ சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த தனியார் பஸ் சாரதி, நடத்துனருடன் தக்கர்த்தில் ஈடுபட்டதுடன் தனியார் பஸ் நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இதன்போது நடத்துனர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கோப்பாய் பொலிஸார் கோண்டாவில் டிப்போ பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பொலிஸார் நடுவீதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை தரித்திருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .