2021 மார்ச் 06, சனிக்கிழமை

சமூகவிரோத செயலில் ஈடுபட்ட கும்பலுக்கான விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலின் விளக்கமறியலை எதிர்வரும் யூன் மாதம் 3ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

கடந்த 8ஆம் திகதி யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ். நகர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட வாள்வெட்டு கும்பலை மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு வெள்ளிக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்து கொள்ளபட்டபோது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ஐவரையும் எதிர்வரும் யூன் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த கும்பலில் அண்மையில் தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரும் உள்ளடங்கியுள்ளமை குறிபிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .