2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்கவும்'

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

தற்போது சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் மீள்குடியேற்ற மாவட்டம் என்பதன் காரணமாக வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட குழிகளில் மழைவெள்ளம் தற்போது தேங்கிநிற்கின்றது.

'இக்குழிகளில் சிறுவர்கள் தவறிவிழுகின்ற அபாயநிலை உள்ளதால் பெற்றோர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு தமது பிள்ளைகளை செல்லவிடாது பாதுகாக்குமாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்திலுள்ள சகல உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர்கள் கடுமையான நடைமுறைகளை கடைப்பிடிக்கவேண்டுமென உணவக உரிமையாளர்களுக்கு வலியுறுத்தி வருவதாகவும் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் கொதித்தாறிய நீரையே பருகவேண்டுமெனவும் சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதன் ஊடாக தொற்றுநோய்களிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளலாமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .