2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஜனாதிபதி வேட்பாளரின் இணைப்பாளர் மீது தாக்குதல்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது இனத்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு, இன்று (16) நடைபெற்று வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நகரில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த தம்பிராசா சென்ற வேளை, இனந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சியொன்றின் குழுவொன்றே தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, தம்பிராசா தெரிவித்துள்ளார்.

-நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .