2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தகாத வார்த்தையால் ஏசியதாக முறைப்பாடு

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் தகாத வார்த்தையால் தன்னைத் திட்டியதாக அச்சுவேலி வைத்தியசாலை வைத்தியர் அச்சுவேலி வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (27) முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சல் மற்றும் வயிறோட்டத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இயலாமல் இருந்த அவரை அங்கு நின்ற தொண்டர் சக்கரநாற்காலியில் வைத்துத் தள்ளிச் சென்றுள்ளார். அங்கு வந்த வைத்தியர் அவர் இறங்கி நடக்கட்டும், இறக்கிவிடுங்கள் என தொண்டரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரங்கொண்ட வயோதிபர் தன்னால் 'இயலாத நிலையில் என்னை இறங்கச் சொல்கின்றாயே' என தகாத வார்த்தையால் வைத்தியரை ஏசியுள்ளார். ஏசிய பின் அங்கு சிகிச்சை பெறாமல் ஊறணி வைத்தியசாலைக்குச் சென்ற வயோதிபர், அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை தகாத வார்த்தையால் பேசியுள்ளதாக வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .