2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தடைகளை மீறி யாழ். மாணவர்கள் அஞ்சலி

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் தின  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடை, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் தடைகளை மீறி நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

-எம்.றொசாந்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .