2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

தம்பதிகள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர்கள் விளக்கமறியலில்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

துன்னாலை வடக்குப் பகுதியில் இளம் தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

இரவு வேளையில் வீட்டு குளியலறையில் இளம்தம்பதியினர் குளித்துக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள், அவர்கள் குளிப்பதை எட்டிப்பார்த்துள்ளனர். இதனை அவதானித்த கணவர், இளைஞர்களை துரத்திச் சென்றபோது, அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .