Sudharshini / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்.நகரப்பகுதியில் கடந்த 20ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியினைச் சேர்ந்த யாழ்.நகரிலுள்ள பாடசாலையில் ஆசிரியர்களாக கடமையாற்றும் தம்பதிகளான மா.தவமணிவண்ணன் (வயது 44) மற்றும் தர்சினி (வயது 41) ஆகிய இருவரும்; இனதெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 20ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு குறித்த தம்பதிகள் சென்றுள்ளனர். இதன்;போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இவர்களுடன் தகாத முறையில் நடந்துள்ளனர்.
இதனால் ஆத்திரடைந்த அவர்கள் இருவரும் இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் தம்பதிகள் இருவரையும் இளைஞர் குழு மிக மோசமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
21 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
31 minute ago
36 minute ago