Princiya Dixci / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
சுன்னாகம் மீன் சந்தையில் திருக்கையை துண்டு துண்டுகளாக வெட்டி சுறாத்துண்டுகள் என விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
சுன்னாகம் மீன்சந்தையில் நுகர்வோரை ஏமாற்றும் நடவடிக்கை பல இடம்பெற்று வருவதாக வலிகாமம் தெற்குப் பிரதேச சபையிடம் பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.
நிறையில் மோசடி, பழுதடைந்த மீன்களை விற்பனை செய்தல், ஐஸ் மீன்களை விற்பனை செய்தல், புதிய மீனின் இரத்தத்தை பழுதடைந்த மீனுக்கு பூசி விற்பனை செய்தல் என பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
நோயாளர்களின் உணவுத் தேவைக்காக சுறா மீன் வாங்கிச் சென்றவர்கள், சுறாவென திருக்கையை கொடுக்கப்பட்டமையால் அதனால் நோய்த்தாக்கத்துக்குள்ளாகிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என பொதுமக்கள் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago