2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தேர்தல் ஆணையாளர் தென்மராட்சிக்கு விஜயம்

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- கி.பகவான்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம்மேற்கொண்டதுடன் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும்  கலந்துகொண்டார்.

பாடசாலையின் அதிபர் திருமதி வசந்தாதேவி மேகலிங்கம் ஓய்வுபெறுவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கௌரவிப்பு விழாவை நடத்தியிருந்தனர். இந்நிகழ்வுக்கு எதிர்பாராதவிதமாக மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்துகொண்ட அவர், நூல் ஒன்றை வெளியிட்டு வைத்ததுடன், வித்தியாலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .