Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூரில் உள்ள சட்டவிரோதக் கட்டடங்கள் தொடர்பில், சபை உறுப்பினர்கள் எவரும் கருத்துத் தெரிவிக்காது மௌனம் காத்தமையால், சட்டவிரோதக் கட்டடங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் த. தியாகமூர்த்தி தலைமையில், நேற்று (11) நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர், சபை எல்லைக்குட்பட்ட சட்டவிரோதக் கட்டடங்களை அனுமதிக்க முடியாதெனவும் சபைப் பொறுப்பேற்ற முதல், சட்டவிரோதக் கட்டடங்களை நிர்மாணிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளக் கட்டடங்களை அகற்ற வேண்டுமெனவும் இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்து இருப்பதாகத் தெரிவித்த அவர், இருந்தாலும் அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லையெனவும் கூறினார்.
இருப்பினும், சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கபடுகின்றனவெனத் தெரிவித்ததுடன், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தான் தயாரெனவும் கூறினார்.
எனவே, சட்டவிரோதக் கட்டடங்களை இடித்தொழிப்பதற்கு, சபை ஒத்துழைப்பு தேவையென தெரிவித்த அவர், அதற்கு நீங்கள் தயாராவெனவும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு உறுப்பினர்கள் எவரும் பதிலளிக்காது, தொடர்ந்து மௌனம் காத்ததால், இவ்விடயத்தைக் கைவிட்டு, அடுத்த விடயத்துக்கு தவிசாளர் சென்றார்.
11 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
2 hours ago