2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

‘பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், செல்வநாயகம் ரவிசாந்

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு தான் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லையெனவும் கூறினார்.

புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழத்துத் தெரிவித்து அனுப்பியுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின் கீழ் இணைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நடவடிக்கையானது, வகுப்புவாதப் பாதையில் பிரசாரமாக நகர்வதை உணர்ந்த தான் உங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லையெனவும், அதற்காக மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை என தான் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்தேறிய தேர்தல், தான் நினைத்தது சரியென நிரூபித்துக் காட்டியுள்ளதெனத் தெரிவித்துள்ள ஆனந்த சங்கரி, உள்ளூராட்சி, பொதுத்தேர்தல்கள் மட்டுமன்றி சகல விடயங்களிலும் இனவாதம் தலைதூக்கிய போதெல்லாம் தான் வெறுப்படைந்திருந்தது நீங்கள் அறியாததல்லவெனவும் கூறியுள்ளார்.

ஒரு குழுவினர் ஒன்றிணைந்து, தாங்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், தமது கோரிக்கைகள் 13ஐயும் நிறைவேற்ற வேண்டுமெனக் கூறியிருந்தனரென ஞாபகமூட்டியுள்ள அவர், அக்குழுவில் பலர் இருந்தபோதும், ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் கூட தம்முடன் இணையுமாறு தன்னிடம் கோரவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால், நிச்சயமாக தான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேனெனத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப் பிரச்சினை பற்றியதாகுமெனவும் கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கானத் தீர்வை, தாங்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கின்ற காலத்திலேயே நிறைவேற்றுவீர்கள் எனத் திடமாக நம்புவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .