A.P.Mathan / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி.சில்வா, சனிக்கிழமை (03) கொழும்பிலிருந்து புகையிரதத்தில் மக்களுடன் பயணம் செய்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
12.30 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த புகையிரதத்தில் பயணம் செய்த அமைச்சரை சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
இதன்போது புகையிரத நிலைய வளாகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன் புகையிரதத்தில் பயணம் செய்யும்போது மக்கள் தெரிவித்த முறைப்பாடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் கலந்துரையாடினார். அத்துடன் அங்கிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago