2021 மே 10, திங்கட்கிழமை

புகைத்தலுக்காக தாக்குதல் மேற்கொண்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

திருநெல்வேலி, கலாசாலை வீதியிலுள்ள கடைக்காரர், புகைபொருள் வழங்க தாமதமாகியமையால் மூவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

திருநெல்வேலி, கலாசாலை வீதியிலுள்ள கடைக்கு, திங்கட்கிழமை (28) மாலை சென்ற இளைஞர்கள், கடையில் பணியாற்றிய இளைஞன், கடை உரிமையாளர் மற்றும் நியாயம் கேட்க வந்த வயோதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

புகைபொருள் வழங்க தாமதமாக்கியமையாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மதுபோதையில் கடைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள், புகைபொருளை  தருமாறு கேட்டபோது, கடையில் கூட்டம் அதிகமாக இருந்தமையால் அவர்களுக்கு அதனை வழங்குவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனையடுத்து, அந்த இரண்டு இளைஞர்களும் கடையில் பணியாற்றிய இளைஞர் மற்றும் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், நியாயம் கேட்கச் சென்ற முதியவர் ஒருவரையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கடை உரிமையாளர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.  

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X