Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
“தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியல் யாப்பொன்று, ஒருபோதும் வெளிவரப்போவதில்லை” என்று, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 70ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில், நேற்று (20) இடம்பெற்றது.
இதன்போது, அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையொன்று முன்மொழியப்பட்டது.
இப்பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
“ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஊடாகவே, ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால், ஆளுநர்களே இருக்கக் கூடாது என்றே, நாங்கள் தெரிவிக்கின்றோம்.
அந்தவகையில், மத்திய மாகாண ஆளுநருக்கும் எனக்கும் இடையில் வானொலி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலின் போது, மத்திய மாகாண ஆளுநரின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் யாப்பு எந்தக் காலத்திலும் வெளிவரப்போவதில்லை என்பது தெளிவாகிறது. அதுமாத்திரமன்றி, தமிழ் மக்களின் சம்மதம், அந்த அரசியல் யாப்புக்கு தேவைப்படாது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago