George / 2016 மே 17 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நேசமணி
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அனைவரையும் ஆத்மார்த்தமாக பிரார்த்திக்குமாறு அகில இலங்கை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இயன்றளவில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்ற இடங்களிலோ, ஆலயங்களிலோ அல்லது வீடுகளிலோ தீபங்கள் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளுமாறும் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக மரங்களை நாட்டுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், மாங்குளம் சிவஞானசித்தர் பீடத்திலும், குழந்தைவேல் சுவாமி சமாதி சிவாலயத்திலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைக்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் நெய் தீபம் ஏற்றி இறை சிவனிடம் எம் உறவுகளுக்காக பிரார்த்திக்க விரும்புவோர் புதன்கிழமை (18) மாலை 5 மணிக்கு குறித்த இடங்களுக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025