Princiya Dixci / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய நடைபவனி, யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை (05) காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகியது.
புங்குடுதீவு மாணவி, கொட்டதெனிய சோயா ஆகியோர் பாலியல் வன்கொடுமையின் மூலம் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் இனிவருங்காலங்களில் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த நடைபவனி கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், மாகோ, குருநாகல், வறக்காப்பொல, கம்பஹா ஊடாக எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
48 minute ago
2 hours ago