2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன்

27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.  

அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் மயிலிட்டி மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .