Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இருதயநோய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டு, மருந்து வாங்குவதற்கு வரிசையில் அமர்ந்திருந்த முதியவர், நெஞ்சுவலி காரணமாக அங்கேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லர் கணேசமூர்த்தி (வயது 64) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமை போல மாதந்த சிகிச்சைக்கு வந்த வயோதிபர், வைத்திய ஆலோசனைக்கு அமைவாக மருந்து வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். சன நெரிசல் காரணமாக தலைச்சுற்று ஏற்பட்ட அவருக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் கூறினர்.
விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago