Princiya Dixci / 2015 நவம்பர் 23 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், இராமநாதன் வீதியில் ஆனந்தகுமாரசுவாமி விடுதிக்கு அண்மையிலுள்ள வீதியை முழுவதுமாக தடை செய்து மழை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளால் அந்த வீதியினூடாகப் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதான வீதியாக இராமநாதன் வீதியானது இருக்கின்றது. இந்த வீதியில் விடுதிக்கு முன்பாகவுள்ள பகுதியில் மழை காலங்களில் பெருமளவு வெள்ளம்; தேங்குவதால் வீதியினூடான போக்குவரத்துப் பாதிக்கப்படுவதுடன், வீதியும் பழுதடைந்து குன்றும் குழியுமாக மாற்றமடைந்துள்ளது.
இந்த வீதியைப் புனரமைக்குமாறு பலரும் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தும் அது நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது, மழை காலம் ஆரம்பிக்கும் நிலையில் மேற்படி வீதியை புனரமைக்கும் பணியை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டுள்ளது. வீதியில் மதகு அமைத்து வீதியில் வெள்ளம் தேங்காதவாறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் புனரமைப்புப் பணிகளால் வீதியால் முழுவதுமாக பயணிக்க முடியாதுள்ளது. மழை காலத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமையால், மதகுகளில் கொங்கிறீட்கள் இறுக்கமடைய தாமதமடைவதால் புனரமைப்புப் பணிகளும் தாமதமடைகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த மதகு அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
4 hours ago