2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மானிப்பாயில் புதிய மீன் சந்தை

Kogilavani   / 2016 மார்ச் 15 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் மத்திய பொதுச் சந்தையின் மீன் சந்தை நெல்சிப் திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் செலவில் நவீன முறையில் புதிய இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

சந்தைக் கட்டடத்தொகுதியில் மரக்கறி மற்றும் வர்த்தக நிலையங்களுடன் இயங்கிவரும் மீன்சந்தை இடவசதி போதாமை மற்றும் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்தது. இந்தச் சந்தைக்கு அயல் கிராமங்களிலிருந்து அதிகளவான மக்கள் வருவதால் சந்தை அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் தற்போது சந்தை அமைந்துள்ள கட்டடத் தொகுதிக்கு பின்புறமாகவுள்ள 4 பரப்புக் காணியை கொள்முதல் செய்த மானிப்பாய் வர்த்தக சங்கம், இதனை பிரதேச சபையிடம் வழங்கியது.

இந்தக்காணியில் தற்போது மீன் சந்தையானது நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--