2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

யாழ். ஆவா குழு கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர், தருமபுரம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர், சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஓட்டோ ஒன்றில் பயணித்த இருவர், புதுக்குடியிருப்புப் பொலிஸாராலும் பஸ்ஸில் பயணித்த 10 பேர், தருமபுரம் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டனர்.

ஆனைக்கோட்டை, கூழாவடி, மானிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

தேர்தல் கடமைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ள சந்தர்ப்த்தைப் பயன்படுத்தி, முல்லைத்தீவில் வாள்வெட்டு, வன்முறைச் சம்பவமொன்றில் ஈடுபட மேற்படி ஆவா கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

-எம்.றொசாந்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .