Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ். நகரில் இடம்பெறும் போக்குவரத்து விதிமீறல்களை, யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (22) காலை முதல் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள ஆஸ்பத்திரி வீதி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் முனீஸ்வரன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறி வாகனங்கள் செலுத்துவோரை நிறுத்தி அவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன், வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களின்றி வாகனங்கள் செலுத்தும் நபர்களுக்கெதிராகவும் கடுமையான நடவடிக்கைகளும் எடுத்ததை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், நடமாடும் போக்குவரத்துப் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
.
18 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago