2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை மீள ஆரம்பிக்கவும்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை தொடர்ச்சியாக இயக்குவதற்கு வசதியாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களையும் உள்ளடக்கிய முகாமைத்துவ குழுவொன்றை நியமித்து தமிழ் ஊடகக் கல்வியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்' என யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.

பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்கப் பயணம் எனும் தொனிப்பொருளில் வெகுஜன ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலக, யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை (26) யாழுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, யாழ்.பல்கலைகழக ஊடக  வளங்கள் பயிற்சி மையத்தை  மீள ஆரம்பிக்க வேண்டும், யாழ். பல்கலைகழகம் வெளிவாரி ஊடக பட்டப்படிப்பை மேற்கொள்ள  ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து ஊடக அமைச்சரிடம் யாழ். பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பழைய மாணவர்கள கையளித்த  மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மகஜரில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'இதழியல் டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தோருக்கு அரச வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தை தொடர்ச்சியாக இயக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வசதியாக ஊடக அமைச்சினூடாக தொடர்ச்சியாக நிதியுதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X