2021 மே 18, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 55 மில்லியன்

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உலக வங்கியின் ஊடாக யாழ். மாவட்டத்தின் நகர அபிவிருத்தி செயற்றிட்ட பணிகளுக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்  தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கின் துரித அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் உலக வங்கியின் ஊடாக முன்னேடுக்கப்பட்டுள்ள இதர அபிவிருத்திப்பணிகள், உட்கட்டுமானங்கள், சமூக மேம்பாட்டுப்பணிகள், மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கமும் மாகாண அமைச்சுக்களில் இருக்கின்ற பிரதேச சபைகளும் கூடிய வேலை செய்யமுடியும் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

இதன் ஊடாக யாழ். மாவட்டத்தின் நகர அபிவிருத்தி செயற்பாடு பணிகளுக்கான உலக வங்கியின் ஊடாக 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி  நகர அபிவிருத்தி பணிகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அபிவிருத்தி செயற்றிட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பீற்றர் டி எடிஸ் தெரிவித்தார்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார்.

இத்திட்டம் எதிர்வரும் மாதங்களில்; யாழ். மாவட்டத்தின் தென்மாராட்சிப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .