Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நடிகர் விஜய்க்கு, யாழ்ப்பாணம் காகில்ஸ் சதுக்கம் மற்றும் ராஜா திரையரங்கு ஆகியவற்றுக்கு முன்னால், இளைஞர்கள் சிலர் இணைந்து கட்டவுட் வைத்துள்ளனர்.
விஜய் நடித்த புலி திரைப்படம் நாளை வியாழக்கிழமை (01) திரையிடப்படவுள்ள நிலையில், அதற்காக விஜய்க்கு கட்டவுட் வைத்துள்ளனர்.
கட்டவுட் வைத்தவர்களின் பெயர்களையும் அவர்கள் அதில் பதிந்துள்ளதுடன், அதற்கு அலைபேசி விற்பனை நிலையம் ஒன்று அனுசரணை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகருக்கு கட்டவுட் வைக்கும் பழக்கம் யாழ்;ப்பாணத்தில் இல்லாத நிலையில், புதிய பழக்கமாக இவ்வாறு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சங்கங்களும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .