Menaka Mookandi / 2016 ஜூலை 08 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், இம்மாதம் (21)ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்தை, பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்துமாறு சமாசத் தலைவர் என்.கணேசன் தெரிவித்தார்.
இந்த வாரத்தை முன்னிட்டு, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (21)ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்கு, கண்காட்சி மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படும்.
பனம் உற்பத்திப் பொருட்கள், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். பிற்பகல் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.
வடமாகாணத்தில் பனம் பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பனை அபிவிருத்தி வாரம் யாழில் பிரகடனப்படுத்தப்படவுள்ளது என்று சமாசத் தலைவர் என்.கணேசன் தெரிவித்தார்.
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026