2021 மே 08, சனிக்கிழமை

யுவதி மீது கத்திவெட்டு

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

பரந்தன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் யுவதியை, சைக்கிளில் சென்ற ஒருவர், பூநகரி - பரந்தன் வீதியின் 10ஆம் கட்டைப்பகுதியில் வைத்து வியாழக்கிழமை (08) காலை கத்தியால் வெட்டியுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.

பூநகரி முட்கொம்பன் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஜீவா சுபாசா என்ற யுவதியே இவ்வாறு வெட்டுக்காயத்துக்கு உள்ளான நிலையில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூநகரியிலுள்ள தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த இவ்யுவதியை, வீதியில் சைக்கிளில் சென்ற ஒருவர் மறித்துள்ளார். எனினும், அவர் நிற்காமல் சென்றதையடுத்து, சைக்கிளில் சென்ற நபர் தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் தலையில் வெட்டியுள்ளார்.

காயமடைந்த நிலையில் வீதியோரத்தில் கிடந்த யுவதியை மீட்ட பொதுமக்கள், பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அதனையடுத்து, குறித்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X