2025 ஜூலை 02, புதன்கிழமை

ரூ.20 மில்லியன் பெறுமதியான முதிரைக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை, தும்பளைப் பிரதேசத்திலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான முதிரைமரக் குற்றிகளை நேற்று வியாழக்கிழமை (31) கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைக்; கைதுசெய்துள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னிக்காடுகளிலிருந்து வெட்டிய முதிரைமரக் குற்றிகள் காணியொன்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. இந்நிலையில், குறித்த இடத்துக்குச் சென்ற  பொலிஸார் 331 முதிரைமரக் குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.

பாரந்தூக்கியின் உதவியுடன் முதிரை மரக்குற்றிகளை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .