Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அண்மையிலுள்ள வீதிகள், யாழ். மாவட்டச் செயலக உட்புறத்தில் உள்ள பகுதி உள்ளிட்ட பகுதிகளில், பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸாரின் மோப்ப நாய்களும் கொண்டுவரப்பட்டு, சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மேலதிகமாக, தீயணைப்புப் படை வீரர்களும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இன்றிலிருந்து மார்ச் 19ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெறவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
10 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
41 minute ago
2 hours ago