2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வெடிமருந்துகளுடன் நால்வர் கைது

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜித்தா, என்.ராஜ்

பருத்தித்துறை - வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அருகில், உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், நால்வர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், பூநகரி பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அவர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரெனவும் கூறினர்.

அவர்களிடமிருந்து, சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்தும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X