2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண குறைநிரப்பு ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் நிறைவேற்றம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையான நிதிக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான குறைநிரப்பு ஒதுக்கீட்டு நியதிச்சட்டம், வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) நிறைவேற்றப்பட்டது.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், மாதாந்த அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. இதன்போது, குறைநிரப்பு ஒதுக்கீட்டு நியதிச்சட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சபையில் முன்வைத்தார்.

இதனை சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், குறித்த குறைநிரப்பு ஒதுக்கீட்டு நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .