2021 ஜனவரி 20, புதன்கிழமை

வருடாந்தப் பரிசளிப்பு விழா

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

ஏழாலை புனித இசிதோர் றோ. க. த. க ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா, அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி பாடசாலையின் அதிபர் சி. நல்லகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் திருமதி சுபாஸினி சாந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் ஏழாலை கிழக்கு சாளையடி சனசமூக நிலையத்தின் செயலாளர் ம. சுரேஸ்குமார் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது 2019 தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களான த. சுபர்த்திகா, க. தர்மினி, கி. வினிஸ்ரன் ஆகியோர் பதக்கம் அணிவித்தும் சிறப்புப் பரிசில்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.

சித்திபெற்ற மாணவர்களைக் கல்வியில் மேலும் ஊக்குவிக்கும் முகமாக ஏழாலை கிழக்கு சாளையடி  சனசமூக நிலையத்தினர் சித்தி பெற்ற மூன்று மாணவர்களுக்கும் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள்,  தரம் 01 முதல் 05 வரை தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவியர், வகுப்பு ரீதியிலான சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஆகியோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .