2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டும்

Princiya Dixci   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வரட்சி நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதி மக்களின் நிலையறிந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், இந்த வருடத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வரட்சியானது, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. 

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் நீருக்கான தட்டுப்பாடு நிலவுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரட்சி நிலை தொடருமானால் எமது மக்கள் இன்னும் அதிகமான பாதிப்பினைச் சந்திக்க நேரிடும். 

தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வரட்சி நிலை தொடர்வதால், மக்கள் நீர்த் தட்டுப்பாட்டிற்கு மட்டுமன்றி, வாழ்வாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக விவசாயத்துறை சார்ந்த மக்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் தொழில் வாய்ப்புகளில் சவாலானதொரு நிலையில் வாழ்ந்துவருகின்றனர். 

எனவே, இந்த மக்களின் நிலை கருதி அரசாங்கம் இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X