2021 மே 08, சனிக்கிழமை

வர்த்தகரை உதைத்த பொலிஸூக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

கொடிகாமம், மந்துவில் பகுதியைச் சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரை காலால் உதைத்த ஓமந்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் ஒருவரை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

மந்துவில் பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸார், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் மேற்படி வர்த்தக நிலையத்துக்குச் சென்று பெற்றோல் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வர்த்தகர் இல்லையென்று கூறவே வர்த்தகரை காலால் உதைத்துள்ளார்.

வர்த்தகர் இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, கொடிகாமம் பொலிஸார், மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X