2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

வாள்களுடன் இளைஞர்கள் சிக்கினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வாள்களுடன் பயணித்தக் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை, சுன்னாகம் பொலிஸார், நேற்று (09) மாலை கைதுசெய்துள்ளனர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து, இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சுன்னாகம் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே, குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் அவர்கள் 21 மற்றும் 23 வயதுகளையுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X